தமிழ் விக்கி இணையப்பக்கம் அமெரிக்க நண்பர்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அறிவுரை ஆலோசனை சொல்வதெல்லாம் எப்படியோ ஒருவர் தன்னை சற்று மிகைப்படுத்திக்கொள்வது தான். எத்தனை பணிவாகச் சொன்னாலும் அதிலொரு அதிகப்பிரசங்கித்தனம் உள்ளது. சொல்பவனுக்கு இன்பக்கிளுகிளுப்பும் இல்லாமலில்லை. ஆனால் அமெரிக்கா சென்றுவிட்டவர்கள் அங்கிருந்து நமக்கு பத்தி பத்தியாக ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை, இடித்துரைப்புகளை சொல்லும்போது நாமும்தான் சற்று சொல்லி வைப்போமே என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே சந்திப்புகளில் சொன்னவற்றை பதிவு செய்து வைக்கலாம் என்று தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு நான் நான்குமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சராசரியாக ஒரு மாதகாலம் தங்கியிருக்கிறேன். பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு ஊரில் என தொடர்ந்து அமெரிக்கா முழுக்க பயணம் செய்து கொண்டே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அமெரிக்காவை அமெரிக்காவில் பலகாலமாக வாழ்ந்தவர்களை விட அதிகமாக பார்த்திருக்கிறேன். ஆகவே இந்தக்கருத்துகளை சொல்வதற்கான ஓர் அடிப்படைத்...
Comments
Post a Comment